×

அந்நிய பொருட்களை விற்க கூடாது: த.வெள்ளையன் வேண்டுகோள்

ஆலந்தூர்: தென்சென்னை கிழக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் மடிப்பாக்கத்தில் நடந்தது. தலைவர் ஆர்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் டி.நிரஞ்சன், பொருளாளர் ஜே.பாலாஜி, ஜெயராமன், சி.எஸ்.பெருமாள் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் டி.குமார் வரவேற்றார். கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பேசும்போது, “அந்நிய பொருட்களை சங்க நிர்வாகிகள் விற்க கூடாது. நம்நாட்டு பொருட்களை விற்பதன் மூலம் அந்நிய பொருட்களின் விற்பனையை தடுக்க முடியும். அந்நிய கம்பெனிகளுக்கு நம் நாட்டு தலைவர்கள் பல்வேறு சலுகை வழங்கி வருகின்றனர். இதை நிறுத்த வேண்டும்.

நம் நாட்டு பொருட்களை வாங்கி விற்பனை செய்வதன் மூலம் அந்நிய பொருட்கள் தலையீட்டை நம்மால் தடுக்க முடியும்’என்றார். கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் சி.எல்.செல்வம் மாவட்ட துணைத்தலைவர்கள் தஞ்சை தம்பி, மாணிக்கராஜ், ராகவன் மற்றும் வேளச்சேரி ரவிச்சந்திரன், சாந்தகுமார், தமிழ்வேந்தன், ஈஸ்வரமூர்த்தி, எட்டியப்பன், ஈசிஆர் ராஜ், ராமநாதன், சக்திகுமார், கே.டி.பழனிச்சாமி, ஆர்.பிரபாகரன், மெஸ்மர் காந்தன் வெள்ளையன், ஜிஎஸ்டி.செல்வம், வடிவேல், சின்னதுரை, வி.தேவன், பாலமுருகன், மடிப்பாக்கம் ஜோன்ஸ், அப்துல் காதர், சன்னாசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : T. Vellayan , Do not sell foreign goods: T. Vellayan request
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100