புயல் எச்சரிக்கை எதிரொலி; முதல்வர் நிகழ்ச்சி தேதி மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: புயல் எச்சரிக்கை எதிரொலியாக, முதல்வரின் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்ட தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்மசாமி தலைமையில் வரும் 25ம் தேதி முற்பகல் பெரம்பலூர் மாவட்டத்திலும், பிற்பகல் அரியலூர் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் வானிலை மாற்றத்தின் காரணமாக புயல், மழை எச்சரிக்கை உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், மேற்கண்ட நிகழ்ச்சிகள் மாற்றம் செய்யப்பட்டு வரும் 27ம் தேதி முற்பகல் பெரம்பலூர் மாவட்டத்திலும், பிற்பகல் அரியலூர் மாவட்டத்திலும் முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>