×

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை புறநகர் சிறப்பு ரயில்கள் ரத்து

சென்னை : சென்னை சென்ட்ரல் - கூடூர் ரயில் மார்க்கத்தில் உள்ள அத்திப்பட்டு புதுநகர் - அத்திப்பட்டு ரயில் நிலையங்களுக்கிடையே  பராமரிப்பு பணி நடைபெறுவதால்,  வருகிற 2020 நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் கீழ்வருமாறு

 நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் புறநகர் சிறப்பு ரயில்கள் ரத்து:

1) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 10:15, 10:45 மற்றும் மதியம் 12:15, 01:15, 01:45, 02:45 மணிக்கு கும்மிடிப்பூண்டி வரை  இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

2) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 12:45 மணிக்கு சூளூர்பேட்டை வரை  இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது.

3) கும்மிடிப்பூண்டி  ரயில் நிலையத்திலிருந்து காலை 09:30, 10:30, 11:30 மற்றும் மதியம் 12:00, 01:00, 02:00 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை  இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

4) சூளூர்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து  மதியம் 01:00 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை  இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

Tags : Gummidipoondi ,Sulurpet ,Chennai Central , Maintenance work, Central, Gummidipoondi, Sulurpet, Suburbs, Trains canceled
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!