×

வெளிநாடு செல்லாத ஆண்டாக மாறியது 2020: மனதளவில் பிரதமர் மோடியை தாக்கிய கொரோனா..!!

டெல்லி: உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்றின் தாக்கத்தால் பிரதமர் மோடி இந்த ஆண்டில், அவர் வெளிநாடு செல்லாத ஆண்டாக 2020 மாறியுள்ளது. இந்த நிலையில், அவர் கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றது முதல், அவர் வெளிநாடு செல்லாத ஆண்டாக 2020 மாறியுள்ளது.

இதற்கு முன்னர், 2014ம் ஆண்டு இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றார். அந்த ஆண்டின் ஜுன் 15 முதல் 2019ம் ஆண்டு வரையில் பிரதமர் மோடி 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதில், 2014ம் ஆண்டு 9 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி 2015 ஆம் ஆண்டு 23 நாடுகளுக்கும், 2016ம் ஆண்டு 17 நாடுகளுக்கும் அடுத்த ஆண்டுகளில் 14 நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.

கடந்த, 2017-ம் ஆண்டு 14 வெளிநாட்டு பயணங்களும், 2018-ம் ஆண்டு 23 வெளிநாட்டு பயணங்களும், 2019-ம் ஆண்டு 15 வெளிநாட்டு பயணங்களும் மேற்கொண்டுள்ளார். 1 முறை 35 நாடுகளுக்கும், 2 முறை 15 நாடுகளுக்கும், 3 முறை 2 நாடுகளுக்கும், 4 முறை 4 நாடுகளுக்கும், 5 முறை 3 நாடுகளுக்கும், 6 முறை 1 நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

2015ம் ஆண்டில் அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் மட்டும் 500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதால் அனைத்து நாடுகளுக்குமான விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதன் காரணமாக பிரதமர் மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு பிரதமருக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது. 2021-ம் ஆண்டு ஜப்பான் செல்ல திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi ,Corona , Abroad, 2020, Prime Minister Modi, Corona
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...