வழிப்பறியில் ஈடுபட்டதாக புகார்: மதுரையில் பா.ம.க.நிர்வாகிகள் கூண்டோடு கைது

மதுரை: வாடிப்பட்டி அருகே லாரி ஓட்டுனரை வழிமறித்து பணம் பறித்த வழக்கில் மதுரை கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் தற்போது கைது செய்யபட்டிருக்கிறார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஊச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த கல்குவாரியில் ஓட்டுநராக பணிபுரிபவர் லாரி டிரைவர் முருகேசன். இவர் நேற்று இரவு ஊச்சம்பட்டியில் இருந்து வந்துகொண்டிருக்கும் பொது பா.ம.க.கட்சியின் மதுரை கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளராக உள்ள நவீன்குமார், துணை செயலாளராக உள்ள சீனி என்கிற ராஜேந்திரன், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளராக உள்ள கார்த்தி, மற்றும் கட்சி நிர்வாகிகளில் ஒருவரான சசி ஆகியோர் ஒரு காரில் சென்று அந்த லாரியை வழிமறித்துள்ளனர்.

 பின்பு காரில் இருந்த அரிவாளை கட்டி மிரட்டி அவர் பையில் இருந்து ரூ. 7500 ரொக்கப்பணத்தை எடுத்துள்ளனர். இது தொடர்பாக முருகேசன் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் வாடிப்பட்டி போலீசார் இரவோடு இரவாக மதுரை கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளராக உள்ள நவீன்குமார், துணை செயலாளராக உள்ள சீனி என்கிற ராஜேந்திரன், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளராக உள்ள கார்த்தி மற்றும் சசி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் , இவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்தியதாக கூறப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

பா.ம.க. நிர்வாகிகளுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழிப்பறி வழக்கில்  பா.ம.க. நிர்வாகிகள் கூண்டோடு கைதானது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

Related Stories:

>