×

பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கியுள்ளது : முதல் 15 பேர் பங்கேற்கவில்லை

சென்னை: பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில்  ரேங்க் பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்துள்ள மாணவர்கள் பங்கேற்கவில்லை. பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இன்றைய தினம் 3 சுற்றுகளாக நடைபெற கூடிய இந்த கலந்தாய்விற்கு 361 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அதில் முதல் 50 மாணவர்கள் காலை 9 மணிக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில்  முதல் 15 மாணவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. அதாவது மருத்துவ கலந்தாய்வு தேர்வில் முதல் மதிப்பெண்ணான 710 மதிப்பெண் பெற்ற மாணவர் உட்பட வரிசையாக 1 முதல் 15 இடங்களை பெற்றுள்ள மாணவர்களில்  ஒருவர்கூட பங்கேற்கவில்லை. 16 -வது  இடம் பெற்றுள்ள மாணவர் தான் இந்த கலந்தாய்வில் முதலாவதாக பங்கேற்றுள்ளார்.

அதேபோல் முதல் 50 இடங்களுக்கான பட்டியலில் மொத்தம் 30 மாணவர்கள் இந்த முதல் சுற்று கலந்தாய்விற்கு வரவில்லை. காலை 9 மணி சுற்றுக்கு அழைக்கப்பட்ட 50 மாணவர்களில் வெறும் 20 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இது குறித்து மருத்துவ அதிகாரிகளிடத்தில் கேட்ட போது அவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற மாநிலங்களில் இருக்க கூடிய எய்ம்ஸ் மாதிரியான கல்லூரிகளில் மருத்துவம் படிக்க முயற்சி செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். கரணம் அவர்கள் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பதால் அவர்கள் தேசிய மருத்துவ கல்லூரிகளில் முயற்சித்து அங்கு அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனாலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இத்தனை பேருக்கு  அவ்வாறு இடம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் ஒருதரப்பு கூறியிருக்கிறது. மேலும், முதல் 50 இடங்களை பெற்றுள்ள மாணவர்களில் 30 மாணவர்கள் பங்கேற்க்காதது அதிகரிக்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தமிழகத்தில் உள்ள முன்னிலை கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்தும் அவர்கள் ஏன் இந்த கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது.

Tags : consultation ,public , Medical consultation for the general public has begun: the first 15 did not participate
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...