மளிகை கடையில் கொள்ளை

பொன்னேரி: பொன்னேரி அடுத்த தடப்பெரும்பக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(50). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை மூடிவிட்டு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் எதிரே உள்ள கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பிஸ்கட் பாக்கெட். சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் ₹3 ஆயிரம் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 புழல்:  செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் ஹாஜாமைதீன்(43). இவர் தனது வீட்டின் கீழே டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம்போல் தனது டீக்கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, ₹2000 மற்றும் ₹3 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட், பீடி கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>