×

கார்த்திகை தீப விழாவையொட்டி அகல் விளக்கு செய்யும் பணி தீவிரம்

ஊத்துக்கோட்டை: வருகிற 29ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் பெண்கள் தங்களின் வீடுகளில் விரதம் இருந்து அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள். இந்நிலையில், பெரியபாளையம் அருகே அகரம், தண்டலம், ஊத்துக்கோட்டை அருகே புதுக்குப்பம், பாலவாக்கம் உள்ளிட்ட 2க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் கார்த்திகை தீபத்திற்காக அகல் விளக்குகள் தயார் செய்து அதை வெயிலில் காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது, “இம்மாதம் 29ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெறவுள்ளதால் அதற்காக நாங்கள் அகல் விளக்கு தயார் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறோம். இந்த அகல் விளக்குகளை சென்னை, திருவள்ளூர், மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் இருந்தும் ஒரு ரூபாய் முதல் 15 ரூபாய் வரை வாங்கிச்செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பிரச்னையால் இதுவரை பெரிய அளவிலான ஆர்டர்கள் வரவில்லை” என்றனர்.


Tags : festival ,Akal ,Karthika Deepa , Intensity of work to make Akal lamp for Karthika Deepa festival
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...