பைக் விபத்து ஒருவர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் பெரியகுப்பம் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன்(58). நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆயில் மில் அருகே சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்டுள்ளார். இதில் வாகனத்துடன் கன்னியப்பன் சாலையில் கீழே விழுந்தார். இதனால் தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கண்ணியப்பனை கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>