லாரி மீது பைக் மோதி பெற்றோர் கண்முன் சிறுவன் பரிதாப பலி

திருவள்ளூர்: தாம்பரம் அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தஜோதி(38). இவர் தனது மனைவி கனகதுர்க்கா(36) மற்றும் மகன் ரித்தீஷ்(8) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லிக்கு சென்றுவிட்டு மீண்டும் படப்பையில் உள்ள வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, வண்டலூர் வெளிவட்ட சாலையில் காவல்சேரி அருகே சென்றபோது லாரி நிற்பதற்கான எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக ஆனந்தஜோதி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மகன் ரித்தீஷ் தாய், தந்தை கண்ணெதிரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான்.

ஆனந்தஜோதி மற்றும் கனகதுர்கா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை உடனடியாக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து வெள்ளவேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories:

>