×

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டாம்: தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன் கடிதம்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். இதில் அந்த கட்சியின் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் பொருளாளராக ஷோபா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விஜய்யின் தாயார் ஷோபா, மறுநாளே அந்த கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகி, கணவர் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தார். மேலும், அசோசி யேஷன் தொடங்குவதாக கூறியே, எஸ்.ஏ.சந்திரசேகரன் என்னிடம் கையெழுத்து வாங்கினார்.

இரண்டு முறை கட்சியின் பெயரில் கையெழுத்து கேட்டபோது மறுத்துவிட்டேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டிருந்த அறிக் கையில், ‘எனது தந்தை தொடங்கிய கட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதையும் மீறி எனது பெயரை பயன்படுத்தினால், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சந்திர சேகரன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சி திட்டத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கைவிட்டுள்ளார்.

Tags : party ,Vijay People's Movement ,Election Commission ,SA Chandrasekaran , Do not register the Vijay People's Movement as a political party: SA Chandrasekaran's letter to the Election Commission
× RELATED தேர்தல் களத்தில் திரைப்பட நட்சத்திரங்கள்