×

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பணம் பட்டுவாடா புகாரால் பரபரப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2020-22ம் ஆண்டுக்கான தேர்தல், சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூ ரியில் நேற்று காலை 8  மணிக்கு தொடங்கியது. தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன்  நியமிக்கப்பட்டார். கல்லூரியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டு இருந்தது. மொத்தம் உள்ள 27 பொறுப்புகளுக்கு 112 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 1303 பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள். தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளி ராம நாராயணன், டி.ராஜேந்தர், பி.எல். தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். துணை தலைவர்கள் பதவிகளுக்கு எஸ்.கதிரேசன், கே.முருகன், வி. மதியழகன், பி.டி.செல்வகுமார், ஆர். சிங்காரவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் போட்டியிட்டனர். செயலாளர்கள் பதவி களுக்கு மன்னன், ஆர். ராதாகிருஷ்ணன், கோட்ட படி ராஜேஷ், கலைப்புலி ஜி.சேகரன், சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிட்டனர்.

பொருளாளர்  பதவிக்கு கே.ராஜன், சந்திரபிரகாஷ் ஜெயின், ஜேஎஸ்கே.சதீஷ்குமார் போட்டியிட்டனர். செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 94 பேர் போட்டியிட்டனர். நடிகர்களும் தயாரிப்பாளர்களுமான கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், அருண் பாண்டியன், பிரகாஷ்ராஜ், மோகன், எஸ்.ஜே.சூர்யா, சசிகுமார், ராதாரவி, தியாகராஜன், விமல், காந்த், கருணாஸ்,  நட்டி, நிதின் சத்யா, நடிகைகள் குஷ்பு, ராதிகா, தேவயானி, ஜெயசித்ரா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர்கள் ஷங்கர், பார்த்திபன், மிஷ்கின், வெங்கட் பிரபு, தங்கர்பச்சான், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, சேரன், கவுதம் மேனன், எஸ்.பி.முத்துராமன், சமுத்திரக்கனி, அமீர், மோகன் ராஜா, பாண்டிராஜ், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, சத்யஜோதி தியாகராஜன், ஏ.எம்.ரத்னம், கல்பாத்தி அகோரம், ஐசரி கணேஷ், அபிராமி ராமநாதன், சுரேஷ் பாலாஜி, எல்.ேக.சுதீஷ், கேயார், ஞானவேல்ராஜா, கமீலா நாசர், சங்கிலி முருகன் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் வாக்காளர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டதாகவும், பணம் பட்டுவாடா  நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதனால் தயாரிப்பாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை 4 மணி யளவில் வாக்குப்பதிவு முடிந்தது. 1050 வாக்குகள் பதிவானது. வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை நடைபெறுகிறது.

Tags : election ,Tamil Film Producers' Association , Tamil Film Producers' Association election
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்