பசுக்களை பாதுகாக்க மபி.யில் கோமாதா வரி: முதல்வர் சவுகான் அறிவிப்பு

போபால்: பசுக்களின் பாதுகாப்புக்காக ‘கோமாதா வரி’யை வசூலிக்க, மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. பசுக்களின் பாதுகாப்புக்காக சமீபத்தில் இவர், தனி அமைச்சரவை குழுவை அமைத்தார். இதில், 6 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம், சவுகான் தலைமையில் நேற்று நடந்தது.

இதில் பேசிய சவுகான், ‘‘பசுக்களுக்குத் தேவையான கொட்டகைகள் அமைப்பது, அவற்றுக்கு தீவனம் அளிப்பது போன்றவற்றுக்காக ‘கோமாதா வரி’ திட்டத்தையும் அமல்படுத்த முடிவு செய்துள்ளேன். பசுக்கள் சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவது, ஆராய்ச்சி மையம் அமைப்பது போன்ற பணிகளும் அகர் மல்வா மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது,’’ என்றார்.

Related Stories:

>