×

அரசு விழாவை தேர்தல் பரப்புரை மேடையாக்குவதா? முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட அரசு நிகழ்வை பாஜ-அதிமுக  தேர்தல் கூட்டணி அறிவிப்பு மேடையாக்கப்பட்டுள்ளது. அரசு விழாவில் அரசின் திட்டங்களை விளக்குவதும், சில சாதனைகளை எட்டியிருப்பதாகவும் கூறுவது மரபாகும். அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள், கட்சி எல்லைகளைத் தாண்டிய பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்வில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு பாஜவின் விசுவாசிகள் என்பதை காட்டிக் கொண்டனர். அரசு விழாவை, சிறிதும் வெட்கமின்றி தேர்தல் கூட்டணி அறிவிப்பு மேடையாக்கிய மலிவான செயலில் ஈடுபட்ட முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கும், இந்த மரபு மீறிய செயலைத் தடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையான கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.

Tags : state ceremony ,Mutharajan , Will the state ceremony be used as an election campaign platform? Mutharajan condemned
× RELATED அதிமுக தலைவர்கள் சொத்துகளை...