கோவையில் 9வது நாள் வேல் யாத்திரை பாஜ தலைவர் முருகனை கைது செய்யாத போலீஸ்

கோவை: கோவையில் வேல் யாத்திரையை மருதமலையில் இருந்து துவங்க பாஜவினர் சென்றனர். ஆனால் போலீசார் யாத்திரைக்கு அனுமதி தரவில்லை. மாநில தலைவர் எல்.முருகன் உட்பட நிர்வாகிகள் சிலர் 5 வாகனங்களில் கோயிலுக்கு சாமி கும்பிட செல்ல அனுமதி வழங்கப்பட்டது. மற்றவர்களை அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, மருதமலை அடிவாரத்தில் போலீசாருக்கும், பா.ஜ. கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அடிவாரத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. கடந்த 8 நாட்களாக வேல் யாத்திரை செல்ல முயன்றதற்காக மாநில தலைவர் முருகன் உள்ளிட்டோரை கைது செய்த போலீசார் இங்கு யாரையும் கைது செய்யவில்லை. இதைத்தொடர்ந்து, சிவானந்தா காலனியில் பாஜக வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.

Related Stories:

>