அமித்ஷா டெல்லி திரும்பினார்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார். தேர்வாய் கண்டிகை நீர் தேக்கம், மெட்ரோ ரயில் 3 வது வழித்தடம் உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து எல்லை பாதுகாப்புப்படை தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அமித்ஷாவை சென்னை விமான நிலையத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தமிழக பாஜ தலைவர் முருகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

Related Stories:

>