×

கூடூர் மார்க்கத்தில் ரயில்கள் நேர மாற்றம்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை-கூடூர் தடத்தில் உள்ள அத்திப்பட்டு, அத்திப்பட்டு ஸ்டேஷன் ஆகிய இடங்களில் பராமரிப்புப்பணி பல்வேறு நேரங்களில் இன்று முதல் வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இதன் காரணமாக ஷாலிமர்-திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் 24ம் தேதி பெரம்பூர் வந்தடைந்தவுடன், மாற்றுப்பாதையில் ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி வழியாக இயக்கப்படும். தானாபூர்-பெங்களூரு சிறப்பு ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மதியம் 1.30 மணிக்கு 25, 28ம் தேதி வந்தவுடன், மாற்றுப்பாதையில் ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி வழியாக இயக்கப்படும். இதே பாதையில் 25ம் தேதி சாப்ரா-சென்ட்ரல் ரயிலும், 28ம் தேதி பெங்களூரு-தானாபூர் சிறப்பு ரயிலும் இயக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Time change of trains on Koodoor route
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...