3 டெஸ்டில் கோஹ்லி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுக்கும்... இயான் சேப்பல் கணிப்பு

சிட்னி: ஆஸ்திரேலிய அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டியோடு கோஹ்லி நாடு திரும்புவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்று ஆஸி. முன்னாள் நட்சத்திரம் இயான் சேப்பல் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி முதலில் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. பிரசவத்தின்போது மனைவி அனுஷ்காவுடன் இருக்க முடிவு செய்துள்ள கேப்டன் கோஹ்லி, அடிலெய்டில் முதல் டெஸ்ட் முடிந்ததும் (டிச. 17-21) இந்தியா திரும்புகிறார்.

இதனால் கடைசி 3 டெஸ்டில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இயான் சேப்பல் கூறுகையில், ‘கோஹ்லி இல்லாதது இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மிகப் பெரிய ஓட்டையை ஏற்படுத்தும். அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்வதும் சிக்கல் தான். களமிறங்கும் 11 வீரர்களை சரியாகத் தேர்வு செய்யும் அணியே டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும். கோஹ்லி இல்லாததால் கிடைக்கும் வாய்ப்பை இளம் வீரர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என நினைக்கிறேன்’ என்றார்.

Related Stories: