×

மத்திய, மாநில அரசுகள் கல்வியில் தரம் பிரிக்கின்றன: பாலகிருஷ்ணன், மாநில தலைவர், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறப்பான மருத்துவக்கல்வி உள்ளது. நீட் கொண்டு வரும்போதே தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். நீதிமன்றம் வரை சென்றபோது ஒரே மாதிரியான மருத்துவ நுழைவுத்தேர்வு தான் இருக்கும் என்றார்கள். ஆனால், இப்போது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு தனியாகவும், மாநில அரசு கல்வி நிறுவனங்களுக்கு தனியாகவும் நுழைவுத்தேர்வை கொண்டு வருவது நீட்டின் அடிப்படை கொள்கையையே சாய்த்துவிடுகிறது. நாம் எந்த காரணத்திற்காக நீட்டை ஒப்புக்கொண்டமோ அந்த காரணத்தையே உடைப்பது போல் மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது.

மத்திய அரசு தனக்கு கீழ் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு இனி-செட் (INI-CET) தேர்வை நடத்துவது போல் மாநில அரசின் கீழ் மருத்துவ கல்வி தேர்வை நடத்திக்கொள்ள அனுமதி கொடுத்துவிடலாம். இதுவே சரியான முடிவாக இருக்கும். கல்வியின் தரம் ஒரே மாதிரி தான் இருக்க வேண்டும். மாணவர்களின் கல்வித்தரத்தை பிரிக்ககூடாது. மத்திய, மாநில அரசுகள் கல்வியை தரம் பிரிப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். இனி-செட் தேர்வு மூலம் மாணவர்
களின் மனநிலை உடையும். இடஒதுக்கீடு முறையை உடைப்பதற்காகவே அனைத்தையும் ஒன்றாக்கினார்கள். ஆனால், தற்போது நடைபெறுவது மறைமுகமாக இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது போல் உள்ளது.

தமிழகத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் தான் மருத்துவ சீட் கிடைத்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழகத்தில் மருத்துவக்கல்வி தரமாக இருப்பதால் அண்டை மாநிலங்களில் உள்ளவர்கள் இங்கே வருகிறார்கள். இதனால், தமிழகத்தில் உள்ள மாணவர்களின் எம்.பி.பி.எஸ் கனவு பாதிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும். மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் தமிழகம் பின்தங்கிய நிலைக்கு சென்றுவிடும். முதுகலை பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடங்களை நாம் மத்திய அரசுக்கு கொடுத்து விடுகிறோம்.

எனவே ஆந்திரா, ஜம்மு காஷ்மீரில் உள்ளது போன்ற 100 சதவீத இடங்களை தமிழக அரசு முழுமையாக கேட்டுவாங்க வேண்டும். நூறு சதவீத இடங்களை வாங்குவதன் மூலம் தமிழகத்தில் மருத்துவ கல்வித்தரம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
மருத்துவம் படிக்க வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களின் நிலை மோசமாக உள்ளது. மொழி தெரியாமல் பல மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, முதுகலை படிப்பை தமிழகத்திலேயே அவர்கள் படிக்க 100 சதவீதம் இடங்களை தமிழகத்திலேயே உருவாக்க வேண்டும். ஒரு விதிமுறையை அமல்படுத்தினால் அதை குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை பின்பற்ற வேண்டும்.

அடிக்கடி விதிமுறைகளை மாற்றி புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும். எனவே, மருத்துவ நிபுணர் கமிட்டி ஒன்றை மத்திய அரசு அமைத்து அதன் மூலமே முடிவு எடுக்க வேண்டும். இடஒதுக்கீடு முறையை உடைப்பதற்காகவே அனைத்தையும் ஒன்றாக்கினார்கள். ஆனால், தற்போது நடைபெறுவது மறைமுகமாக இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது போல் உள்ளது. தமிழகத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் தான் மருத்துவ சீட் கிடைத்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.

Tags : State ,Central ,Governments ,State President ,Balakrishnan ,Tamil Nadu Government Doctors Association ,Democratic , Central and state governments classify education: Balakrishnan, state president, Democratic Tamil Nadu Government Doctors Association
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...