நெல்லையில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

நெல்லை: நெல்லையில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மாலையில் ஆக்சி பிரபா உறவினர் வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து ஆக்சி பிரபாவை மட்டும் காணவில்லை. அப்போது அவள் அங்குள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி தத்தளிப்பதை கண்டனர். உடனடியாக அவர்கள் ஆக்சி பிரபாவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Related Stories:

>