உளுந்தூர்பேட்டையில் மன அழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு யோகா பயிற்சி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், எடைக்கல், எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலை போலீசாருக்கும், போக்குவரத்து மற்றும் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கும் பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோக பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த யோகாசன பயிற்சி வகுப்பில் டிஎஸ்பி விஜிகுமார் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பெண் காவலர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பயிற்சியில் மன அழுத்தம் குறைவதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் யோகாசன ஆசிரியர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories:

>