×

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க. வினர் சாலை மறியல்

சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து பல இடங்களில் தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தி.மு.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். உளுந்தூர்பேட்டையில் சாலைமறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நரசிங்கம்பேட்டை, திருப்பூர் ஆகிய பகுதிகளில்  சாலை மறியலில் ஈடுபட்ட 300 -க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Tags : Winer Road Stir ,DMK ,Udayanidhi Stalin , DMK condemns Udayanidhi Stalin's arrest Winer Road Stir
× RELATED தமிழ் உள்ளவரை கலைஞர் சாதனைகள்...