விராட் கோஹ்லியை முறைத்தது ஏன்?..சூர்யகுமார் விளக்கம்

மும்பை: நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ்வின் சிறப்பான பேட்டிங்கால் மும்பை வெற்றி பெற்றது. போட்டியின் ஒரு கட்டத்தில் கோஹ்லி சிறப்பாக ஆடிக் கொண்டு இருந்த சூர்யகுமாரை நோக்கி சென்று முறைத்துப் பார்த்து ஸ்லெட்ஜிங் செய்தார். இது ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது அதுபற்றி சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். அதில் ‘போட்டியில் இருவரும் முறைத்துக்கொண்டது இரு தரப்பிலும் மிகவும் இயல்பாக நடந்தது. போட்டி முடிந்ததும் அதைப் பற்றி பேசி நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டோம். அன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடியதாக கோஹ்லி என்னை வாழ்த்தினார்’ எனக் கூறியுள்ளார்.

Related Stories:

>