×

முகக்கவசம் கட்டாயம்: சபரிமலை செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.!!!

சென்னை: தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகளின்படி, அனைத்து பக்தர்களும் காவல்துறையின் மெய்நிகர் வரிசைக்கான வலைவிவரப் பக்கத்தில் (https://sabarimalaonline.org/)  பதிவு செய்ய வேண்டும். தரிசன நேரத்திற்கு முன்னதாக 24 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கோவிட்-19 தொற்றின்மைச் சான்று முன்பதிவுக்கு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணல் இருப்பவர்கள் பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பயணத்தின் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். நெய் அபிஷேகம் செய்யவும், பம்பை ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோருக்கான அட்டை, ஆயுஸ்மான் பாரத் அட்டை போன்றவற்றை வைத்துள்ளவர்கள், தங்கள் பயணத்தின்போது அவற்றை உடன் கொண்டுவர வேண்டும். சன்னிதானம் பம்பா மற்றும் கணபதி கோவில் ஆகிய இடங்களில் இரவு தங்கவும் அனுமதியில்லை. எருமேலி, வடசேரிக்கரா ஆகிய இரண்டு வழிகளில் மட்டுமே தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Sabarimala. ,devotees , Mask compulsory: The Government of Tamil Nadu has issued guidelines to be followed by the devotees going to Sabarimala. !!!
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...