×

கழிவுநீரை பொது இடத்தில் விட்டதை கேட்ட நகராட்சி கமிஷனரை தாக்க முயற்சி

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை பொது இடங்களில் விடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று திருவேற்காடு நகராட்சி கமிஷனர் செந்தில்குமரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் ஆகியோர் திருவேற்காடு கோலடி பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது. அங்கு பொது இடத்தில் கழிவுநீர் லாரியில் இருந்து கழிவுநீர் ஊற்றப்பட்டது. இதையடுத்து அங்கு சென்று அதிகாரிகள் கேட்க முயன்றபோது லாரி உரிமையாளர் ரவி(51) என்பவர் நகராட்சி கமிஷனரை தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை அழைத்து சென்றனர்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் செந்தில்குமரன் திருவேற்காடு காவல் நிலையத்தில் ரவி மீது புகாரளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் நகராட்சி கமிஷனரை தாக்க முயற்சி செய்த ரவியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிடிபட்ட ரவி திருவேற்காடு நகராட்சி முன்னாள் அதிமுக நகரமன்ற தலைவர் மகேந்திரனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு காரணமான கழிவுநீர் லாரியையும் பறிமுதல் செய்து அந்த வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : commissioner ,place , Attempt to attack municipal commissioner who heard that sewage was left in public place
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...