காஞ்சி எஸ்பிக்கு கொரோனா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எஸ்பி சண்முகப்பிரியாவுக்கு, கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுகிறார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சண்முகப்பிரியாவுக்கு நேற்று முன்தினம் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை, டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில், அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து எஸ்பி சண்முகப்பிரியா, தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்பியின் அலுவலக பணிகளை செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.

இதைத்தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்துக்கு புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள மகேஸ்வரி ரவிக்குமாருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>