தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டி நெறிமுறை பயிற்சி

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் சின்மயா சிவில் சர்வீஸ் பயிற்சி மையமும் இணைந்து கல்லூரி வளாகத்தில் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டி நெறிமுறை பயிற்சி வகுப்பு நடந்தது. தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கல்லூரி துணை முதல்வர் ரம்யா வரவேற்றார். பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர், கல்லூரி செயலாளற் விஜயராஜ், ஏஜிஎம் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோயம்புத்தூர் சின்மயா அகாடமி ஒருங்கிணைப்பாளர் ராமதேசிகன், பொருளியல் துறை பேராசிரியர் புருஷோத்தமன் ஆகியோர் தமிழ்நாடு அரசு நடத்தும் குரூப் 1, 2 போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.மேலும் சின்மயா அகாடமியில் பயிற்சி பெற்று வெற்றிபெற்ற மாணவர் ஜெகதீஷ் போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கான நுணுக்கங்களைக் கூறினார்.  தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பாவைமலர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

Related Stories:

>