×

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை, மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் மனுக்கள் தொடர்பான சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெரு, சேர்மன் சுவாமிநாதன் முதலியார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, நடுத்தெரு நகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் உப்பேரிகுளம் தெரு கே.வி.கே. நகராட்சி தொடக்கப்பள்ளி, ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் பணியின் கீழ் நடைபெற்ற பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியின் கீழ் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மைய அமைப்பு இடங்களில் நேற்று, இன்று மற்றும் டிச.13, 14 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம். தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்து. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர் படிவம் 6, பெயர் நீக்கம் செய்வதற்கான படிவம் 7, வெளிநாட்டில் வசிப்பவர்கள் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6ஏ, பெயர் வயது பாலினம் உறவுமுறை முதலிய பதிவுகளில் திருத்தம் ஆகியவைக்கு படிவம் 8, ஒரு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 8ஏ ஆகியவை தொடர்பான படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிர்ணய அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் காலை 9 மணிமுதல் மாலை 5.30 மணிவரை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் தாசில்தார் பவானி உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.



Tags : Camp , Voter List Editing Camp: District Revenue Officer Review
× RELATED பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள்...