×

வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆலோசனை: 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அருள், மதிரகவி, சங்கர், மணிகண்டன், திருவேங்கடம், குணசேகரன், சந்திரசேகர், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ரவி, மாநில துணை தலைவர் ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் பொங்கல் போனஸ் முறையாக வழங்க வேண்டும்.

ஜமாபந்தி படி வழங்க வேண்டும். வெள்ளம், புயல், சுனாமி, கொரோனா போன்ற இயற்கை இடர்பாடு பணிகளுக்கு இயற்கை இடர்பாடு சிறப்பு படி வழங்க வேண்டும் என்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அப்படி நிறைவேற்றாவிட்டால் வருகிற ஜனவரி மாதத்திலிருந்து தொடர் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Revenue Grama Niladhari Association Advice: Request to fulfill 14 point requests
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...