போலீசாருக்கு சுழற்சி முறையில் விடுமுறை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய முறையில் விடுமுறை வழங்கப்படுவதில்லை எனவும் நீண்ட காலமாக புகார்கள் இருந்து வருகின்றன. அதிலும் தற்போது கொரோனா பரவல் காலத்தில் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்தது மட்டுமல்லாமல், ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றும் 982 போலீசாருக்கு வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கவேண்டும் என தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் முதற்கட்டமாக நேற்று 125 காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு அளித்து உத்தரவிட்டுள்ளார், தொடர்ந்து சுழற்சி முறையில் மற்ற அனைத்து காவலர்களுக்கும் ஒரு நாள் வார விடுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories:

>