நில புரோக்கர் பரிதாப பலி

ஆவடி: ஆவடி வெல்லானூர் 2வது பகுதியை சேர்ந்தவர் கதிரவன்(45). நில புரோக்கர். குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்று முன்தினம் இரவு ஆவடி - கோயில் பதாகை மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். பின்னர் அவர் போதையில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அதே மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு கதிரவன் பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்த ஆவடி டேங்க் பேட்டரி போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>