×

புதிய காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை மறுநாள் முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, காரைக்காலில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே இன்று முதல் வரும் 25ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 24, 25ம் தேதி முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu , New Depression: Chance of heavy rain in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...