மெட்ரோவில் மது அருந்தியவர்களை கண்காணிக்க குழு

சென்னை: மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயணிகள் மருந்து அருந்திவிட்டு ரயில் நிலையங்களுக்கு வருவதை தவிர்க்கும்  பொருட்டு மது அருந்திய பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும்  ரயில் பெட்டிகளில் புகை பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு  மெட்ரோ ரயில் நிலையத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இச்செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,  இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Related Stories:

>