குருவாயூர், திருச்செந்தூர் ரயில் உள்பட 16 ஜோடி ரயில்களை இயக்க திட்டம்: ரயில்வே வாரியத்தின் அனுமதிக்கு காத்திருப்பு

சென்னை: கொரோனா தளர்வுகள் அறிவிக்கபட்ட நிலையில் சிறப்பு ரயில்கள்இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்குவதற்காக  ரரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக தெற்கு ரயில்வே காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ரயில்வே வாரியம் அனுமதி அளிக்கும்  பட்சத்தில் இந்த மாத இறுதிக்குள் அல்லது டிசம்பர் 1ம் தேதி முதல் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூர்-  குருவாயூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16127,16128), சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16851, 16852),  சென்னை எழும்பூர்- திருச்ெசந்தூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் - (16105,16106), சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும்  ரயில்எண் (12667, 12668),

சென்னை எழும்பூர்- காரைக்கால் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16175,16176), அதைப்போன்று சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையே  இயக்கப்படும் ரயில் (12695, 12696), சென்னை சென்ட்ரல்-மங்களூர் இடையே இயக்கப்படும் ரயில் (12685,12686), சென்னை சென்ட்ரல்- பாலக்காடு  இடையே இயக்கபடும் சிறப்பு ரயில் (22651, 22652), கோவை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்(22668, 22667), சென்னை  சென்ட்ரல்-ஐதராபாத் இடையே இயக்கபடும் சிறப்பு ரயில் (12603, 12604), சென்னை எழும்பூர்-மன்னார்குடி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ( 16179,  16180), மதுரை- புணலூர் இடையே ஏற்கனவே (56700, 56701) பயணிகள் ரயிலாக இயக்கப்பட்ட நிலையில் ரயில் (16729, 16730) விரைவு ரயிலாக  இயக்கப்படும்.

அதைப்போன்று நாகர்கோவில்- கோவை இடையே (56319, 56320) பயணிகள் ரயிலாக இயக்கப்பட்ட நிலையில் இனி ரயில் எண் (16312,16322) விரைவு  ரயிலாக இயக்கப்படும். மேலும் தற்போது சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் கன்னியாகுமரி-ஹெவுரா, மதுரை- பிகானீர், திருவனந்தபுரம்-கோர்பா  இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் இனி நிரந்தர எண் கொண்டு இயக்க ெதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories:

>