வீட்டில் கஞ்சா சிக்கியதைத் தொடர்ந்து இந்தி நகைச்சுவை நடிகை அதிரடி கைது

மும்பை: இந்தி நகைச்சுவை நடிகை பார்த்தி சிங்குக்கு சொந்தமாக மும்பையில்  உள்ள 3 வீட்டில் போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள்  சோதனை  நடத்தினர். அப்போது கஞ்சா சிக்கியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம்  தேதி மரணம் அடைந்தார். அவருடைய  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து அது பற்றி சிபிஐ  விசாரணை நடத்திவருகிறது.  அவரது மரணத்தில் போதை பொருள் கும்பலுக்கு  தொடர்பிருப்பது அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

 சுஷாந்த் மரணத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும், இந்தி  சினிமா பிரபலங்களுக்கும் போதை பொருள் பழக்கம் இருப்பது  தெரியவந்தது.  இது  பற்றி தேசிய போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி  வருகிறது. இந்த நிலையில் நேற்று மும்பையில்  உள்ள இந்தி நகைச்சுவை நடிகை பார்த்தி  சிங் வீட்டில் போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  அந்தேரி, வர்சோவா,  லோக்கண்ட்வாலா ஆகிய இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.  அப்போது அவரது அலுவலகத்தில் கஞ்சா  கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அவரை  நேற்று போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த விவகாரம் பாலிவுட்  வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>