காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்தெடுப்பதற்காக முதல் முறையாக டிஜிட்டல் முறையில் தேர்தல் நடத்துவதற்கு  திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர்  ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கட்சியின் இடைக்கால தலைவராக  சோனியாகாந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். சோனியா காந்திக்கு உடல் நல பாதிப்புகள் இருக்கும் நிலையில், மீண்டும் ராகுலே தலைவராக வேண்டும்  என்று அவரது ஆதரவு தலைவர்கள் வலியுறுத்தினார்கள். அதே நேரத்தில் கட்சியை சீரமைக்கும் வகையில் அனைத்து பிரிவுகளுக்கும் தேர்தல்  நடத்தக்கோரி, 23 தலைவர்கள் கட்சியின் தலைமை சோனியாகாந்திக்கு கடிதம் எழுதினார்கள்..

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடவடிக்கைகளை கட்சி தொடங்கியுள்ளது. மதுசூதனன் தலைமையிலான காங்கிரஸ் மத்திய  தேர்தல் ஆணையமானது டிஜிட்டல் தேர்தலை நடத்துவதற்கு தயாராகி வருகின்றது. டிஜிட்டல் முறையிலான தேர்தலுக்கு வாக்களிப்பவர்களுக்கு  அனைத்து தகவல்களும் அடங்கிய டிஜிட்டல் அட்டையானது வழங்கப்படும். காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தேர்தலுக்கு  தயாரானதும், காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் தேர்தல் நடத்துவதற்கு அனுமதி கேட்கப்படும். இரண்டு மாநிலங்களை தவிர மற்ற அனைத்து  மாநிலங்களில் இருந்தும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் பட்டியல் பெறப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>