கோ பேக் அமித்ஷா டிரெண்ட்: டிவிட்டரில் முதலிடம்

சென்னை: தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ‘கோ பேக் அமித்ஷா’ என்ற டிரெண்ட் டிவிட்டரில் அதிகமாக பதிவிடப்பட்டு வருகிறது. நேற்றைய அரசியல் பதிவுகளில் இதுதான் கடந்த 13 மணி நேரமாக முதல் இடத்தை பிடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று தமிழகம் வந்தார். இந்நிலையில், அமித்ஷாவின் தமிழகம் வருகைக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோர் எதிர்ப்பு குரலை பதிவு செய்து வந்தனர். அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிவிட்டரில் சுமார் 2 லட்சம் பேர் ‘கோ பேக் அமித்ஷா’ என்று பதிவிட்டுள்ளனர். கடந்த 13 மணி நேரத்துக்கும் மேலாக இந்த பதிவுதான் இந்திய அரசியல் வட்டார பதிவுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Related Stories:

>