இஸ்ரோ தலைவர் சிவனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

பெங்களூரு: பெங்களூரு கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் பெலகாவி தொழில் நுட்ப பல்கலை சார்பில் இஸ்ரோ தலைவர் கே. சிவனுக்கு டாக்டர் ஆப் சயின்ஸ் கவுரவ டாக்டர் பட்டத்தை கவர்னர் விஆர் வாலா வழங்கி பாராட்டினார்., இந்நிகழ்வில் துணை முதல்வர் அஸ்வத்நாராயண் பேசுகையில்,” டாக்டர் கே சிவன் தலைமையில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இஸ்ரோவின் சார்பில் அடுத்து நடைபெறும் அனைத்து திட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்’’ என்றார். இஸ்ரோ தலைவர் சிவனின் பல்வேறு சாதனைகளுக்கு பாராட்டு அளிக்கும் வகையில் பெலகாவி தொழில் நுட்ப கல்லூரி அறிவியலில் சிறப்பானவர் என்ற சிறப்பு அளித்து “ டாக்டர்” பட்டம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>