கொரோனா பிடியில் அமேரிக்கா...!! கடந்த 24 மணி 1.96 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; பீதியில் மக்கள்

நியூயார்க்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,890,412 ஆகும். உலகில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.78 கோடியாகும். இதுவரை கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,376,763 ஆகும். கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியாகும். இதுவரை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102,195 ஆகும். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் உள்ளது.  

அந்நாட்டில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று வரை 1 கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 396 ஆக உள்ளது என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது.  இதன்படி, 1 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் சராசரியாக இந்த எண்ணிக்கை நாளொன்றுக்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 272 ஆக இருந்தது.  இது அதற்கு 2 வாரங்களுக்கு முன் காணப்பட்ட சராசரியை விட 73 சதவீதம் அதிகம் ஆகும்.

Related Stories:

>