கொரோனா தடுப்பு மட்டுமல்ல, நிர்வாகத் திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம்: அமித்ஷா உரை

சென்னை: கொரோனா தடுப்பு மட்டுமல்ல, நிர்வாகத் திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம் என்று அமித்ஷா உரையாற்றியுள்ளார். உலகத்திலேயே மிகத்தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் உரையாற்ற முடியாததற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று அமித்ஷா கூறியுள்ளார். தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மிகவும் தொன்மையானது. உடல்நல குறியீட்டில் மாவட்டங்கள் இடையே வேலூர், கரூர் மாவட்டங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. கொரோனாவுக்கு எதிராக 130 கோடி மக்களும் அரசுகளுடன் இணைந்து போராடி கொண்டிருக்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் அறிவியல்பூர்வமாக துல்லியமான தரவுகளுடன் பேசுகிறார்கள். மாநிலங்களுக்கு இடையே நல்லாட்சி என்ற போட்டியில் தமிழகம் முதல்நிலை வகிக்கிறது. விவசாயிகளுக்கு விடுதலை தரும் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு தமிழகம் ஆதரவு அளிக்கிறது. நாடு முழுவதும் விவசாயிகளை கட்டுப்படுத்தி வந்த இடைத்தரகர்களை நீக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று அமித்ஷா பேசியுள்ளார்.

Related Stories:

>