×

ரூ.61,843 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிக்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிக்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.  ரூ.61,843 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணியை அமித்ஷா தொடங்கி வைத்தார்.

கோவை - அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை திட்டத்தை அமித்ஷா தொடங்கி வைத்தார்.

கரூர் நஞ்சை புகளூரில் ரூ.406 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றில் கதவணை திட்டத்தை தொடங்கினார் அமித்ஷா.

கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்க திட்டத்தை  மத்திய அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். ரூ.380 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கண்டிகை நீர்த்தேக்கத்தை அமித்ஷா தொடங்கி வைத்தார்.

Tags : Amit Shah ,phase ,Chennai Metro Rail , Amitsha
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...