×

புயல் வரும் அச்சத்தில் படகு, வலை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் மீனவ கிராமங்களில் கனமழை மற்றும் புயல் அடிக்க கூடுமென அச்சத்தால் அவசரம் அவசரமாக தங்கள் படகுகள், வலைகளை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் இதனால் கடற்கரை பரபரப்பாக காணப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வணவன், மகாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டமீனவ கிராமங்களில் சுமார் 1500 பைபர் படகுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் உள்ளன. கடந்த 8 நாட்களாக கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வங்கக்கடல் வழியே நாகை மாவட்ட கடற்கரையோரம் புயல் வீசக்கூடும் என மீனவர்கள் கருதி கரையோரம் வைக்கப்பட்டிருக்கும் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கடல் ஓரமாக ஆற்றுக்குள்ளும், ஊருக்குள்ளும் கொண்டு சென்றனர்.

இதேபோல் கடற்கரையோரம் வைத்துள்ள லட்சக்கணக்கான மதிப்புள்ள வலைகளை டிராக்டர் மூலம் ஏற்றி பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர். இதனால் கடற்கரையோரம் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீசிய கஜா புயலின் போது மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தற்போது புயல் வரும் என கருதி கொண்டு முன்கூட்டியே தங்கள் படகுகளை பாதுகாத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Fishermen , Fishermen
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...