குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடலில் அலைகளின் சீற்றம் அதிகரிக்கும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடலில் அலைகளின் சீற்றம் அதிகரிக்கும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலின் தெற்கு, தென் மேற்கு, மத்திய மற்றும் தமிழக, புதுவை கரையோரம் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு 5 நாள்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24, 25 தேதிகளில் வங்க கடலின் மத்திய பகுதி, தமிழக, புதுவை கரையோரம் பலத்த சூறாவளி வீசும். மிக அதிகபட்சமாக 45-75 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால் இன்று கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>