14 வழித்தடங்களில் ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திடம் அனுமதி கேட்டது தெற்கு ரயில்வே

சென்னை: எழும்பூர், ராமேஸ்வரம், திருசெந்தூர் உள்ளிட்ட 14 வழித்தடங்களில் ரயில்களை இயக்க அனுமதி வழங்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் பயணிகள் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த எலும்பூரில் இருந்துராமேஸ்வரம், திருசெந்தூர், காரைக்கால், நாகர்கோவில், மன்னார்குடி ஆகிய வழித்தடங்களுக்கு ரயில்கள் இயக்க கோரிக்கை ரயில்வே வாரியத்திற்கு விடுத்திருந்தது.

இதேபோல் சென்ட்ரலில் இருந்து மங்களூர், பாலக்காடு,ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் வழித்தடங்களுக்கும் அனுமதி கேட்டிருக்கிறது. மொத்தம் 14 வழித்தடங்களில் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி கோரியுள்ளது. இதற்க்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த முதியவர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகைகளை வழங்கவேண்டும் என பயணிக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் கன்னியாகுமரி -ஹவுரா, மதுரை -பிகானர், திருவனந்தபுரம் -கோர்பா போன்ற வாராந்திர பண்டிகைகால ரயில்களை வழக்கமான சிறப்பு ரயில்களாகவும், மதுரை -புனலூர், நாகர்கோவில் -கோவை பயணிகள் ரயிலை விரைவு ரயில்களாகவும் இயக்க அனுமதிக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்திருக்கிறது.

Related Stories:

>