கொள்ளிடம் பழையார் பகுதியில் 300 கிலோ ராட்சத திருக்கை மீன் மீனவர் வலையில் சிக்கியது

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே பழையாரில் 300 கிலோ எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் நேற்று மீனவர் வலையில் சிக்கியது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையார் பகுதியை சேர்ந்தவர் பச்சைகோட்டையன். மீனவரான இவர், நேற்று அதிகாலை விசைப்படகில் கடலுக்கு சென்று வலைவிரித்தபோது அவரது வலையில் அதிக எடைக்கொண்ட மீன் சிக்கியது.

அதனை மற்ற மீனவர்கள் உதவியுடன் மிகுந்த சிரமத்துடன் பழையார் துறைமுகம் பகுதிக்கு கொண்டு வந்து வலையை பிரித்து பார்த்துள்ளனர். அதில் ராட்சத திருக்கை மீன் இருந்தது. இந்த மீன் 300 கிலோ எடை இருந்தது. பழையார் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு மீனவர் வலையில் அதிக எடை கொண்ட திருக்கை மீன் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

Related Stories:

>