×

திருச்சானூரில் பத்மாவதி தாயார் கோயிலில் புஷ்ப யாகம்

திருமலை: திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று  புஷ்பயாகம் நடந்தது. திருப்பதி தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரமோற்சவம் முடிந்த பிறகு, 4 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரமோற்சவம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து, தாயாருக்கு புஷ்பயாகம் நேற்று நடந்தது. காலை ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், யாகம் வளர்த்து தாயாருக்கு புஷ்பயாகம் விமரிசையாக நடந்தது.

அதில், ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி, தேன், பூக்கள், தாமரை, அல்லி, தாழம்பூ உள்ளிட்ட மலர்கள் மற்றும் மருவு, மரிக்கொழுந்து, தவனம், வில்வம், துளசி உள்ளிட்ட இலைகளால் தாயாருக்கு அர்ச்சகர்கள் யாகம் நடத்தினர்.  இதற்காக 4 டன் மலர்கள் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டது.


Tags : Flower Yagya ,Padmavathi Mother Temple , In Thiruchanur Flower offering at Padmavathi Mother Temple
× RELATED வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி...