மெட்ரோ ரயில் முதல் வகுப்பு பெட்டிகள் மகளிர் பெட்டிகளாக மாற்றம்: வரும் 23ம் தேதி முதல் அமல்

சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வரும் 23ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள அனைத்து முதல் வகுப்பு பெட்டிகளும் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இதன் மூலம் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும்போது மகளிர் பயணிகளின் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் ஏற்படுத்திட முடியும். தற்போதுள்ள சாதாரண கட்டணத்திலேயே பயணிக்கலாம்.

இதுதவிர மகளிர் பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் முழு நேரமும் முழுமையாக கண்காணித்தல், தனி கழிப்பறைகள், வாடிக்கையாளர் சேவை வசதிகள், மது அருந்தியவர்கள் பயணிக்க தடை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>