காசாகிராண்டின் புதிய அடுக்குமாடி குடியிருப்பு

சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான காசாகிராண்ட் சென்னையின் முதல் ஸ்போர்ட்ஸ் தீம் கம்யூனிட்டியான காசாகிராண்ட் ஏதென்ஸ் என்னும் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முகப்பேரில் அறிமுகப்படுத்தியுள்ளது. 8.09 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இக்குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட உலக தரம் வாய்ந்த வசதிகளுடன் 953 ஆடம்பரமான அபார்ட்மென்ட்கள் அமையவுள்ளன. 962 சதுர அடி முதல் 2,222 சதுர அடி வரை வழங்கப்படவுள்ளன.   இவை 2, 3 மற்றும் 4BHK வசதிகளை கொண்டிருக்கும். ஒரு சதுர அடி ₹3,999 விலையில் வழங்கவுள்ளது.

ஸ்லாம் டங்க், சாக்கர் பூல், ஸ்குவாஷ், ஏர் ஹாக்கி, கூடைப்பந்து, டென்னிஸ், பூப்பந்து, கிரிக்கெட் பயிற்சி வலை, ஃபட்சல், பாக்ஸ், கல்லி கிரிக்கெட், பீச் வாலிபால், கபடி, கால்ஃப் புட்டிங், ஸ்கேட்டிங் மற்றும் மினி பவுலிங் போன்ற வசதிகளுடன் 40 பிரத்யேக விளையாட்டு வசதிகளை வழங்குகிறது. 3.5 ஏக்கர் பசுமை புல்வெளி கொண்ட இத்திட்டம் 75 சதவீத திறந்த வெளியுடன் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு உற்ற இடமாக அமைகிறது. இதுகுறித்து காசாகிராண்டின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஈஸ்வர் கூறுகையில், “விளையாட்டு பிரியர்களுக்கென ஒரு சிறந்த இடத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடு வாங்குபவர் ஒவ்வொருவரின் தேவையையும் கவனத்தில் கொண்டு இத்திட்டத்தில் உள்ள பிற வசதிகளும் வடிவமைக்கப்படுகின்றன. இந்த திட்டமானது இந்த பகுதியில் சிறந்த விலை கொண்ட குடியிருப்பாகும்” என்றார்.

Related Stories:

>