×

அப்பாடா... அரையிறுதியில் நடால்

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் நிட்டோ ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் லீக் சுற்றில் ஸ்பெயின் வீரர்  ரபேல் நடால்  2-1 என நேர் செட்களில் கிரீசின் சிட்சிபாசை வீழ்த்தி  அரையிறுதியை உறுதிப்படுத்தினார். கூடவே டொமினிக் தீமை வீழ்த்தி ஆந்த்ரே ருப்லே ஆறுதல் வெற்றி பெற்றார். உலகின் 2ம் நிலை வீரரான ரபேல் நடால், லண்டன் 2020 பிரிவு லீக் சுற்றில் ஆஸ்திரியவை சேர்ந்த 3வது நிலை வீரர் டொமினிக் தீமிடம் அதிர்ச்சி அடைந்தார். அதனால் அவரது அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது. இந்நிலையில் தனது கடைசி லீக் போட்டியில், உலகின் 6ம் நிலை வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் மோதினார். அதன் முதல் செட்டை போராடி 6-4 என்ற கணக்கில்  நடால் கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டில் வேகம் காட்டிய சிட்சிபாஸ் 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். அதனால் கடைசி செட் கூடுதல் எதிர்பார்பை ஏற்படுத்தியது. அந்த செட்டில் அதிவேகம் காட்டிய நடால் 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்றார். அதனால் 2-1 என்ற செட்களில் வெற்றிப் பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தினார். இந்தப் போட்டி 2மணி 4 நிமிடங்கள் நீடித்தது.

 நடாலை வென்று அரையிறுதி வாய்ப்பை உறுதிப் படுத்திய தீம் தனது கடைசி லீக் போட்டியில் ரஷ்யாவின் ஆந்த்ரே ருபலே(8வது ரேங்க்) உடன் மோதினார். ஏற்கனவே 2லீக் போட்டிகளில் வென்ற உற்சாகத்துடன் களம் கண்ட தீமுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது. முதல் செட்டை  ஆந்த்ரே  அதிக அலட்டலின்றி 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். அதனால் 2வது செட்டில்   தீம் கடுமையாக போராடியும் பலனில்லை. அந்த செட்டையும் ஆந்த்ரே 7-5என்ற கணக்கில் வென்றார். அதனால் 2-0 என நேர் செட்களில் தீமை வீழ்த்தி ஆந்த்ரே ஆறுதல் வெற்றிப் பெற்றார். இந்தப்போட்டி ஒரு மணி 14நிமிடங்கள் நடந்தது.

முதல் அரையிறுதிப் போட்டியில்  டானில் மெட்வதேவ்(டோக்கியோ1970)-ரபேல் நடால்(லண்டன்2020) ஆகியோர் மோத உள்ளனர். தொடர்ந்து 2வது அரையிறுதிக்கு  லண்டன் பிரிவில் இருந்து  டொமினிக் தீம் ஏற்கனவே தகுதிப் பெற்றுள்ளார். டோக்கியோ பிரிவில்  நோவக் ஜோகோவிச்-அலெக்சாண்டர் ஸ்வெரவ் இடையிலான கடைசி லீக் போட்டியில் வெற்றி பெறுபவர் தீமுடன் அரையிறுதியில் மோதுவார்.



Tags : Abba ,Nadal ,semifinals , Abba ... In the semifinals Natal
× RELATED அணுமின் நிலைய பணியாளர் தேர்வை ரத்து...