அமெரிக்க அதிபர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை ஜார்ஜியாவில் ஜோ பிடென் வெற்றி: 28 ஆண்டுகளுக்கு பின் ஜனநாயக கட்சி வரலாற்று சாதனை

வாஷிங்டன்: குடியரசுக் கட்சியின் கோட்டையான ஜார்ஜியாவிலும் அதிபர் டிரம்ப்பை காட்டிலும், 12,1284 வாக்குகள் கூடுதலாக பெற்று ஜோ பிடென் வெற்றி பெற்றுள்ளார். ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்கு பிறகு ஜனநாயக கட்சி அங்கு வரலாற்று சாதனை படைத்துள்ளது.கடந்த 3ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் அதிக வாக்குளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனாலும், அதிபர் டிரம்ப், தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் முக்கிய போட்டி களமாக கருதப்படும் மிச்சிகன், ஜார்ஜியா, நெவடா, அரிசோனா, விஸ்கான்சின், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குறிப்பாக, ஜார்ஜியாவில் மீண்டும் வாக்குகளை எண்ண  வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதனால், ஜார்ஜியாவில் கைகளால்  மறுமுறை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

 

இதன் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில்,12,284 வாக்குகள் வித்தியாசத்தில்  பிடென் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு கிடைத்த எலக்டோரல் வாக்குகளின் எண்ணிக்கை 306 ஆக உயர்ந்துள்ளது. குடியரசுக் கட்சியின் கோட்டையான ஜார்ஜியாவில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட பில் கிளிண்டன் 1992 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பிறகு, 28 ஆண்டுகள் கழித்து, பிடெனின் வெற்றி மூலம் குடியரசுக் கட்சி அங்கு சாதனை படைத்துள்ளது.

கடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை விட டிரம்ப் 5 சதவீத கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

ஜார்ஜியா மாகாண வெற்றி அறிவிக்கப்பட்ட நேற்றைய தினம், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் ஜோ பிடென், தனது 78வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதன் மூலம், அமெரிக்காவின் மிகவும் வயதான அதிபராக அவர் பதவியேற்க உள்ளார்.

பொறுப்பற்றவர் டிரம்ப்

ஜார்ஜியா வெற்றியை  தொடர்ந்து பிடென் கூறுகையில், ``நம்ப முடியாத அளவு பொறுப்பற்றதன்மை உள்ளவர்களாக இருப்பதற்கு நல்ல சான்றாக இருக்கிறார் டிரம்ப். நம்பிக்கையற்ற விதத்தில் செய்திகளை அனுப்புவதன் மூலம் ஜனநாயகம் எப்படி செயல்படுகிறது என்பதை உலகிற்கு காட்டுகிறார். அவருடைய உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் முற்றிலும் பொறுப்பற்றவராக செயல்படுகிறார். சீனா  சட்டங்கள், விதிகளின்படி நடந்து கொள்ள வேண்டும். அதன் மீது மேலும்  பொருளாதார தடைகள் விதிக்கும் எண்ணம் கிடையாது. அதே போல், பாரீஸ் பருவநிலை  ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் அமெரிக்கா மீண்டும் இணைய  இருக்கிறது,’’ என்று கூறினார்.

Related Stories: